About Us

என்னை பற்றி,

எளிமையான குடும்பத்தில் பிறந்து இயேசு கிறிஸ்துவின் கிருபையால் நிலை நிற்கிறேன்.

என்னை பற்றி பெருமையாக பேசவோ, புகழ்ந்து பேசவோ எதுவும் இல்லை. பல பிரச்சினைகள், போராட்டங்கள் என் வாழ்வில் வந்தாலும். நான் இன்றளவும் உயிரோடு இருப்பது தேவக் கிருபையே!

எனது நோக்கம்:

இல்லாதவர்களுக்கும், வயோதிபர்களுக்கும், நோய்வாய் பட்டவர்களுக்கும், ஏழைகளுக்கும், கிராம மக்களுக்கும், ஆசிரமங்களுக்கும் என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன். மற்றும் உயிரோடு இருக்கும் வரையில் இது தொடர வேண்டும் என்பதே எனது ஆசை!

மீடியாவை பற்றி:

சிறுபான்மை மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டுமென்ற முயர்ச்சியில் எமது மீடியா இயங்கி வருகிறது. இதன் மூலம் கிறிஸ்தவ மக்கள், மீனவ மக்கள், இஸ்லாமிய மக்கள், கிறிஸ்தவ சபை போதகர்கள், சபைகள். போன்றோரின் குறைகள் மற்றும் பிரச்சினைகளை ஊடகங்களின் பார்வையிலும், மக்கள் பார்வையிலும், அரசின் பார்வையிலும் கொண்டு சென்று தீர்வை பெற்றுத்தருவதே எமது நோக்கம்.

 

தொடங்கப்பட்ட நோக்கம்.

2017 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏதாவது நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பித்தோம். முதலில் விளையாட்டாக பதிவுகள் பதிந்து வந்தோம். 2017 ம் ஆண்டு நவம்பர் மாதம் நாங்கள் பதிவிட்ட ஒரு உண்மை செய்தி மறு நாள் பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சிகளில் ஔிப்பரப்பானது. இதுவே எம்மிடம் பத்திரிக்கையின் வலிமையை காட்டியது. அதன் பின் ஓகி புயலின் போது மறைக்கப்பட்ட உண்மைகளை வெளி உலகிற்கு கொண்டு வந்தோம். இதுவரை எம்மால் பதிவு செய்யப்பட்ட செய்திகள் 136 முறை பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது. இது எமக்கு இன்னமும் உத்வேகத்தை அளிக்கிறது.

Security Code:
security code
Please enter the security code:

Submit